வடகாட்டில் அரச காணி பிணக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோரியது பிரதேச செயலகம்!

0 68

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வடகாட்டுப்பகுதியில் உள்ள அரச  காணி ஒன்றினை தனிநபர் ஆக்கிரமிப்பது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் கடந்த 03.03.21 அன்று தனிநபர் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.


பிரதேச செயலகத்தின் பதிவின் கீழ் உள்ள காணி தனிநபரால் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் 12.11.2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளன இந்த வழக்கின் முதல் விசாரணை 06.02.2021 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் அடுத்த கட்ட வழக்கு 29.03.2021 அன்று நடைபெறவுள்ள நிலையில் வழக்கு நடைபெற்று வந்தபோதும் தனிநகர் காணி அபகரிப்பினால் கிராம மக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது வாள்வெட்டு இடம்பெற்று மூவர் காயமடைந்துள்ளார்கள் இதனை தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் பிரதேச அபிவிருத்தி குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும்.அரச காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றில் பிரதேச செயலகத்தினால் 04.03.21 அன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக தடை உத்தரவிற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


குறித்த அரசகாணி பிணக்கில் காணப்படும் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு நீதிமன்ற நிர்வாகத்தினர் நேரடியாக வந்து காணியில் ஒட்டப்படும் என்றும் பொலீசார் மற்றும் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.