சௌபாக்கிய வாரம் புதுக்குடியிருப்பில் தொடங்கிவைப்பு!

0 19

சமூர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டமான நாட்டுக்கான சௌபாக்கிய வேலைத்திட்டம் 04.03.21 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தொடக்கிவைத்துள்ளார்.


02.03.21 தொடக்கம் 08.03.21வரை நாட்டுக்கான சௌபாக்கிய வேலைத்திட்ட வாராமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளுர் உணவுப்பயன்பாட்டை மேம்படுத்தலும் தொற்றாநோய் கட்டுப்படுத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கும் இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு கோம்பாவில்  கிராமத்திற்கு வழங்கப்பட்ட மரக்கறி கன்றுகளை பார்வையிட்டுள்ளதுடன் குறித்த கிராமத்தில் பகுதியளவில் சேதமடைந்த சமூர்த்தி பயனாளியின் வீடு ஒன்று இரண்டு இலட்சம் ரூபா செலவில் திருத்தம் செய்து பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு சமூர்த்தி பயனாளிகளுக்கு வீட்டு மின்இணைப்பு பெறுவதற்கான சமூர்த்தி கடன்திட்டமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட சமூர்த்தி திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.