வடக்கில் உள்ள 160 சுற்றுலா மையங்களுக்கு வழிகாட்கள் பயிற்சி நிறைவு!

0 5

வட மாகாண சுற்றுலா பணியகமும் சர்வதேச சுற்றுலா சம்மேளனமும் இணைந்து வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றுலாத்துறை சார் வழிகாட்டல் ஆவணம் , சுற்றுலா மையங்களின் காணொளிகள் மற்றும் வழிகாட்டிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முகமாக வழங்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த வட மாகாண பயிலுனர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது

தனியார் விடுதியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து கொண்டு சிற்புரை யாற்றுயிருந்தார்.. சிறப்பு விருந்தினர்களாக யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் . வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் ,வடமாகாண சுற்றுலாதுறை பணியக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்..

குறித்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்தவருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து இன்றைய தினம் வரை
சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்து முதலீட்டு செயற்பாடுகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் உட்பட4 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்

எனினும் அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வேலைத் திட்டமானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அத்தோடு வடக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப் பட்டுள்ள 150 சுற்றுலா மையங்கள் தொடர்பான ஆவணங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது அத்தோடு எதிர்வரும் காலத்தில் வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறை சார்ந்த வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஏனைய பிரதேசங்களை போல முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.