தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் சிறுபோகத்திற்கு 1845 ஏக்கர் அனுமதி!

0 85


முல்லைத்தீவு குமுழமுனை கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள தண்ணீமுறிப்பு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கைக்கான கூட்டம் 24.02.21 அன்று அளம்பில் பகுதியில் அமைந்துள்ள குமுழமுனை கமநலசேவை நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
முத்தையன் கட்டு நீர்பாசன பொறியியலாளர் இ.இராகுலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கமநலஅபிவிருத்தி உத்தியோகத்தர்,விவசாயஅபிவிருத்தி உத்தியோகத்தர்,கிரமசேவகர்கள்,விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்கள்.1ஆம் தொடக்கம் 6ஆம் கட்டங்கள், மற்றும் 11,12ஆம் கட்டங்கள் உள்ளடங்கலாக 1845 ஏக்கர் சிறுபோகம் விதைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் 15.03.21 தொடக்கம் 10.04.21 வரை விதைப்பு திகதியாகவும் நெல்லினம் 3.5 மாத நெல்லினம் என்றும் நீர்வளங்கும் திகதி 15.03.21 தொடக்கம் 20.07.21 வரையும்,கால்நடை உரிமையாளர்களால் பராமரிக்கும் காலம் 15.03.21 தொடக்கம் 30.07.21 வரையும்,வேலி அடைக்கும் கடைசி திகதி 10.03.21 என்றம் வேலி பிரிக்கும் கடைசி திகதி 31.07.21 என்றும் குளத்தின் கீழ் கிழைவாய்க்கால்,பிரதான வாய்க்கால்கல் துப்பரவு செய்து விதைப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.