முல்லைத்தீவில் கைவே பொலீசாரின் நடவடிக்கை பெண்களே பாதுகாப்பு உங்கள் கையில்!

0 9

முல்லைத்தீவில் வீதி போக்குவரத்து பொலீசாரின் பாலியல் சேட்டை பெண்களை அவதானமாக செல்லுமாறு அறிவிப்பு!


முல்லைத்தீவு கைவே வீதி போக்குவரத்து பொலீசார் அதிகாலை வேளை சிலாவத்தை பகுதியில் உந்துருளியில் பயணித்த பெண்மீதுபாலியல் சேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இதனால் இரவுமற்றம் அதிகாலை வேளைகளில் கல்வி நடவடிக்கைக்காக பிள்ளைகளை கொண்டு செல்லும் குடும்ப பெண்கள் பாதுகாப்பாக செல்லுமாறு முல்லைத்தீவின் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.


கடந்த வாரம் சிலாவத்தை பகுதியில் அதிகாலை வேளை பிள்ளையினை தனியார் கல்விக்காக உந்துருளியில் கொண்டு சென்ற குடும்ப பெண்ணிடம் மறித்து சாரதி அனுமதிப்பத்திரம் கேட்ட கைவே வீதிபோக்குவரத்து பொலீசார் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டில் வைத்துள்ளேன் என்று சொன்ன போது குறித்த பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிய முயன்றுள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்கள் பொலீஸ் நிலையத்தில் முறையிடச்சென்றபோதும் அதனை மூடிமறைத்துள்ளார்கள் முல்லைத்தீவு பொலீசார்கள்.


முல்லைத்தீவு பகுதியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அதிகாலை,இரவு நேரங்களில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளுமாறு முல்லைத்தீவு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வீதி போக்குவரத்து பொலீசாரின் இவ்வாறான செயற்பாடுகள் ஊடகங்களில் வெளியில் வரமுடியாதாவறான மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு நகரில் பெண்கள் நடமாடுமாறும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.