சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையினை வலியுறுத்தியே பேரணி இந்தியாவிடம் தெரிவித்தோம்!

0 3

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் முல்லைத்தீவில் வைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்தானிகரை கயேந்திரகுமார் பொன்னம்பலமும் நானும் சந்தித்துள்ளோம்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேசப்பட்டது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி கடந்த ஜனவரி 16 ஆம் திகதி வடக்கு கிழக்கில் இருக்கின்ற முக்கியமான மூன்று அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வடகிழக்கு சிவில்சமூக பிரதிநிதிகளும் கையெப்பம் இட்டு மனித உரிமைகள் பேரவையின் 47 நாடுகளுக்கும் மனிதஉரிமை ஆணையாளருக்கும் அனுப்பிய கடிதத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவே பேரணி நடைபெற்றது என்பதையும்.

ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் தொடர்பில் மனித உரிமைபேரவையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு என்பதனையும்.

அரசியல் தீர்வு தொடர்பில் நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டிருக்கின்ற தமிழ்தேசம் அங்கிகரிக்கப்பட்ட அடிப்படையிலான அரசியல் தீர்வு எங்கள் நிலைப்பாடு என்பதனையும்
13 ஆம் திருத்தச்சட்டம் ஒற்றையாட்சிக்குள் உட்பட்டது அந்த தீர்வு தமிழ்மக்களுக்கு பொருத்தமற்றது என்பதனையும் நாங்கள் இந்திய உயர் அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம் மிகவும் உன்னிப்பாக எங்கள் கருத்துக்களை கேட்டறிந்துகொண்டார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டம் தொடர்பில் கலந்துரையாடலின் போது எங்களுக்கு தெளிவாக கூறப்பட்டது கடந்த ஜனவரி 16 ஆம் திகதி ஜ.நாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனுவிற்கு வலுச்சேர்க்கும் முகமாகவே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில்தான் நாங்கள் கலந்துகொண்டோம் அதில் சொல்லப்பட்டதற்கு மாறாக கடந்த 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பத்து கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்.

அதில் பொறுப்புக்கூறல் தொடர்பிலோ வடக்கு கிழக்கு தாயகம் தொடர்பிலோ தமிழ்தேச அங்கிகாரம் சுயநிர்ணய உரிமை தொடர்பிலோ எந்த கருத்துக்களையும் குறிப்பிடவில்லை இலங்கையினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்றுகூட சொல்லவில்லை இவற்றை மறைத்திருந்தார் இதன் பின்னணியில்தான் இந்திய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பில் எங்கள் இந்த நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் அதற்கு இந்தியா ஒத்துளைக்க வேண்டும் என்ற விடையங்களை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் இந்தியா என்ன நிலைப்பபாடு எடுக்கப்போகின்றது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

ஜ.நா மனிதஉரிமை பேரவையில் தீர்மானம் ஒன்று எடுக்கின்றபோது பாதிக்கப்பட்ட தரப்பினருடைய சம்மதத்துடன்தான் ஒரு தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்பது அங்குள்ள முக்கியமான விதி
இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்களளால் தெரிவு செய்யப்பட்ட 10 பேரைக்கொண்ட தரப்பு ஒரு சர்வதேச தலையீடு தேவை இல்லை என்ற அடிப்படையில் கடந்த 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒரு கருத்தினை பதிவுசெய்துள்ளார்கள்.

இது சர்வதேசத்தினை திசைதிருப்புகின்ற அல்லது சர்வதேச சக்திகள் விரும்புகின்ற விதமாக தமிழ்மக்களின் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்துகின்ற விதமாக அமைந்துள்ளது.

நாங்கள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் மிகத்தெளிவாக இந்தியாவிற்கு சொல்லியுள்ளோம் இந்த பேரணியானது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையினைத்தான் வலியுறுத்தி நடைபெற்றது என்று பதிவுசெய்துள்ளோம்.

வடக்கு கிழக்கில் இருந்து 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் இதில் 5 பேர் நேரடியாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருக்கின்றார்கள். ஏனைய 13 பேரில் 10 பேர் கொண்ட கூட்டமைப்பு நாங்கள் இந்த கோத்தபாய அரசிடம் தான் கோரிக்கை வைத்ததாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பதிவுசெய்துள்ளார் 10 பேர் கொண்ட கூட்டமைப்பினர் சுமந்திரன் அவர்களை இன்றுவரை கூட்டமைப்பின் பேச்சாளராக வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்

இவ்வாறான நிலையில் நாங்கள் இரண்டுபேர் கொண்ட தரப்பு சொல்கின்ற ஒரு கருத்து எந்தளவு தூரம் எடுபடப்போகின்றது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் எங்கள் கடமையினை நாங்கள் சரிவர செய்துகொண்டிருக்கின்றோம் இதனை சரியாக மக்கள் விளங்கிக்கொள்ளாவிட்டால் தமிழர்களின் எதிர்காலம் என்பது இருட்டாக மட்டும்தான் அமையப்போகின்றது.

Leave A Reply

Your email address will not be published.