குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிதைவு பல்லவர் காலத்தை ஒத்துள்ளது!

0 8

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலைப் பகுதியில் நேற்று முன்தினம் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து எஸ்.சிறிதரன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தார லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார். அது பல்லவர்கால கட்டட வடிவமைப்புக்களின் சாட்சியாக இந்த அஷ்டதார லிங்கம் விளங்குகின்றது. ஈழத்தின் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலில் தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அஷ்டதார லிங்கத்தை ஒத்த லிங்கம், தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயத்திலும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.