வவுனியாவில் இருந்து காங்கேசன் துறைவரை பயணிக்கும் இராணுவ வாகன பேரணி!

0 5

பொலிகண்டி பகுதியில் இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டதாக திடீர் தகவல் காட்டுத்தீயாக பரவியுள்ளதை அடுத்து பலவித செய்திகள் பரவி வருகிறது.


இது குறித்து பிரதேசத்தினை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் தகவலை வெளியிட்டுள்ளார்.

காங்கேசந்துறை முதல் வவுனியா வரை இராணுவ வாகன பேரணி ஒன்று இன்றுகாலை முதல் நகர்ந்து வருகிறது.
பொலிகண்டி ஆலடி பகுதிக்கும் பொலிகை கந்தவனபதி முருகன் கோவில் சந்திக்கும் இடைப்பட்ட பகுதில் தற்போது தரித்து நிற்கிறது.

வாகனப் பேரணியில் பயணித்த கவச வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் (அல்லது ஒத்திகை நிகழ்வாகவும் இருக்கலாம்) அதனை ஏற்றும் பிரத்தியேக வாகனத்தில் ஏற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.


அதனால் குறித்த வாகனப் பேரணி நகராது முடங்கியுள்ளது.
இதையடுத்து குறித்த வாகனப் பேரணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீதியின் இருமருங்கிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.