தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றல்!

0 4

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாசி ம  அமர்வு 11.02.21 அன்று தவிசாளர் அ.தவக்குமார் தமைமையில் நடைபெற்றுள்ளது.இதன்போது  சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் அவர்களால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள நிர்ணயம்தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.


 தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000ரூபா  வழங்கப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கோரிக்கையாகும் இதன் இன்றைய நாணயமாற்றுப் பெறுமதி 1430ரூபா ஆகும் 
 குறிப்பாக தமது நாளாந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாளாந்தம் செய்து வருகின்ற தேயிலை கொழுந்து பிடுங்கும் தொழிலில் பாரிய பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன குறிப்பாக குளவி கொட்டுதல் சிறுத்தை போன்ற விலங்குகளின் தாக்குதல் சம்பவங்கள்இஅட்டை கடிகள் மற்றும் மலை ஏறுதல் போன்ற அச்சுறுத்தல்கள் இவ் வேலையில் காணப்படும் மிகப்பெரிய சவால்கழாகும் 
அத்துடன் தேயிலை கம்பெனிகளின் முகாமை தொழிலாளர்களை  மரியாதையுடன் நடாத்துவதில்லை.

1950ம் ஆண்டுகளில் இருந்ததைப் போன்று அடிமைத்துவ முகாமையும்  தொழிலாளர்களது உரிமைகள் பேனப்படாததுமான  கலாச்சரமே நிலவி வருகிறது. 


ஆகவே எனது பிரேரணையிற்கான தீர்மானமாக 
1)  அடிப்படைசம்பளம்1000ரூபாவழங்கவேண்டும்
2) மாதாந்தவேலைநாட்கள்குறைந்தது24ஆவதுஇருக்கவேண்டும்
3)நாளாந்தசம்பளத்திற்கானதேயிலையின்நிறைஅநியாயமாகஅதிகரிக்கப்படகூடாது.
 4) தொழிலாளர்கள்மரியாதையுடன்முகாமைசெய்யப்படவேண்டும். 
 5)தொழிலாளர்கள்எதிர்நோக்கும்ஆபத்துக்களுக்கானஇழப்பீடுகள்கொடுப்பனவுகள்மற்றும்போதியளவானவிடுமுறைகளும் வழங்கப்பட வேண்டும்.


  இவை போன்ற தொழிலாளர்களது உரிமைகளும் 1000 ரூபாநாளாந்த சம்பளமும் என்கின்ற விடையங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டு நீதியான ஒரு கூட்டு ஒப்பந்தம் இம்முறை நிறைவேற்றப்பட வேண்டும்  என்கின்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு

 ஜனாதிபதிஇபிரதமர் முதலாளிமார் சம்மேளனம் ஆகியோருக்கு  சபையினால்  எடுக்கப்பட்ட தீர்மானம் அனுப்பிவைக்கப்படவுள்ளது

Leave A Reply

Your email address will not be published.