கொம்புவைத்த குளத்தின் ஒரு கொட்டு அடைப்பு விவசாயிகள் கவலை!

0 3

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள கொம்புவைத்த குளத்தின் ஒரு கொட்டு அடைபட்டுள்ளதால் விவசாயிகள் அறுவடையினை செய்யமுடியாத நிலை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.


கடந்த ஆண்டின் இறுதியில் பெய்த கடும் மழைகாரணமாக கொம்புவைத்தகுளத்தின் ஒரு கொட்டுப்பகுதி உமை எடுத்துள்ளது இதனால் மண்மூட்டைகள் போடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன அந்த மண்மூட்டைகள் தண்ணீர் பாயும் கொட்டினை அடைத்துள்ளன.
இதனால் ஒரு கொட்டில் இருந்து நீர் வெளியேறமுடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.


குளத்தின் கீழ் காலபோக நெல்செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய குறுகிய காலம் காணப்படும் நிலையில் வயலுக்கு தண்ணீர் பாச்சவேண்டிய நிலையில் கொட்டு ஊடாக தண்ணீ பாய்ய முடியாத நிலையில் குளத்தில் இருந்து பைப்வைத்தே தண்ணீரினை பாச்சுகின்றார்கள் இது போதியளவு நீரினை கொண்டுசெல்ல முடியாத நிலையில் 5 ஏக்கர் நெல்செய்கை அழிவடையும் நிலை காணப்படுவதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

அடைக்கப்பட்ட கொண்டு ஊடாக நீரினை திறந்துவிட சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.