வடக்கில் இன்றும் 07 பேருக்கு COVID-19 தொற்று உறுதி!

0 7

மன்னாரில் மூவர், அதில் ஒருவர் மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

முசலியைச் சேர்ந்த 91 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த பெண் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

மற்றைய இரு பெண்கள் நோய் அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று மேற்கொண்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி.

யாழில் ஒருவர் யாழ்-கச்சேரி குறுந்தூர சிற்றூதி நடத்துனர் தோய் அறிகுறியுடன் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று மேற்கொண்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி.

கிளிநொச்சி 1, வலைக்பாடு கிராமத்தில் இருந்து நோய் அறிகுறியுடன் கிளி வைத்தியசாலைக்குண் சென்று PCR தொற்று உறுதி.

வ்வுனியா 2, பறையநாளங்குளம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள். மேற்கொண்ட தகவலை வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.