யாழில். ஏரிபொருள் நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்!

0 7

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நெல்லியடியில் உள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமக்கு உடனடியாக எரிபொருள் நிரப்பவில்லை என முகாமையாளர் மீது போத்தலினால் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.