புதுக்குடியிருப்பு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலைவராக வ.அன்னலிங்கம் தெரிவு!

0 3

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவிற்கான கூட்டம். 06.02.21 ப.நோ.கூட்டுறவு சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் முல்லைமாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவிஆணையாளர் வி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.


மூன்று ஆண்டுக்கு ஒருதடவை தலைவர் தெரிவு நடைபெறும் அந்தவகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சங்கத்தினை வழிநடத்திய வ.அன்னலிங்கம் அவர்களின் மூன்று ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளதுதை தொடர்ந்து சங்கத்தின் யாப்பிற்கு அமைவாக புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றுள்ளது.

இதன் போது மீண்டும் தலைவராக வ.அன்னலிங்கம் அவர்களும் உபதலைவராக தா.சண்முகநாதன்.அவர்களும் நிர்வாக உறுப்பினர்களாக க.பூபதிராஜா,செ.பாலசிங்கம்,பொ.தயாபரன்,திருமதி சு.கலைச்செல்வி,திருமதி அ.விஜயதர்சினி,திருமதி இ.மேரிகலிஸ்ரா ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


கொரோன காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வழங்கியதுடன் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண உதவிகளும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் உடாக வழங்ப்பட்டு வந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு மக்கள் சேவைகளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திறம்பட செயற்படுத்தும் கூட்டுறவு சங்கமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.