ஊடக நிறுவனம் தன்னை அவமானப்படுத்தியுள்ளதாக கௌரவ உறுப்பினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் முறைப்பாடு!

0 6

ஊடக நிறுவனம் தன்னை அவமானப்படுத்தியுள்ளதாக கௌரவ உறுப்பினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் முறைப்பாடு!
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நில அளவைத்திணைக்களம் எல்லைகளை வரையறுப்பதற்காக காணிகளையும் வீடுகளுக்கு பயணிக்கும் வீதிகளையும் அளவீடு செய்து எல்லைக்கற்களை போட்டுள்ளார்கள் உடையார் கட்டு கிழக்கில் உள்ள  நான் எனது வீட்டிற்கு தனிஒரு பாதையினையே பாவிக்கின்றேன் நில அளவைத்திணைக்களம் ஆரம்பத்தில் அளந்த அளவினை விட பின்னர் அளந்து எனது காணிக்கு முன்னால் உள்ள காணிக்காரரின் காணியில் 5 மீற்றர் அளந்து அவரின் முற்றத்தில் எல்லைக்கல்லினை போட்டுள்ளார்கள் 
இதனை நான் சொல்லித்தான் அளந்துள்ளதாக அந்த காணிக்காரர்கள் என்னுடன் பிச்சனை பட்டார்கள் இதனை ஊகவியலாளருக்கு சொல்லி ஊடக வியலாளர் பிரச்சனையினை ஆராயாமல் உதயன் பத்திரிகையில் செய்தி பிரசுரித்துள்ளார்.
பிரதேச சபை உறுப்பினர் தன் வீதி அகலிப்பதற்காக சட்டத்தனை மீறினால் என்று நான்தான் அந்த கல்லினை பிடுங்கிபோட்டதாக செய்தி போட்டுள்ளார். 
இது தொடர்பில் தவிசாளருக்கும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.
இந்த செய்தியின் பிரச்சனையின் பின்னர் கிராமத்தில் பிரச்சனையான எல்லோரின் எல்லை கல்லினையும் நில அளவைத்திணைக்களம் பிடிங்கிகொண்டு சென்றுள்ளார்கள் இந்த சம்பத்தினை சரியாக ஆராயாமல் நான் சொன்னது என்று உதயன் போட்டது தவறான விடையம் என்பதை கண்டனமாக தெரிவித்துக்கொள்வதுடன் இதற்குரிய சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சபையின் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளதுடன் சம்மந்தப்பட்ட திணைக்களம் மற்றும் பத்திரிகை நிறுவனத்திடமும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன்.இது தொடர்பில் கௌரவ உறுப்பினர் சி.சுகந்தினி சபை முடிவின் பின்னர் ஊடகவியலாளருக்கு தனது கண்டன கருத்தினை தெரிவித்துள்ளார்.
எல்லைக் கல்லுப்பிரச்சனை அரசாங்கத்தின் சட்டத்திட்டத்தின் படிதான் நில அளவைத்திணைக்களம் செயற்பட்டுள்ளது பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் எனது எந்த தலையீடும் இல்லை சம்பவம் குறித்து என்னுடன் கதைத்து ஆராயாமல் செய்தி போடப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் செய்தி வெளிட்டு என்னுடைய பெயருக்கு அவப்பெயரினை ஏற்படுத்திய பத்திரிகை இதற்கான மன்னிப்பு அறிக்கையினை வெளியிடவேண்டும் என்றும் பிரச்சனை தொடர்பில் ஆராய்ந்து செய்தியினை வெளிடவேண்டும் என்றும் பதிவு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.