நாங்கள் சுடவில்லை; மரம் வெட்ட சென்று வந்த எம்மை இராணுவமே சுட்டது!

0 1

இராணுவத்தினரை நாம் சுடவில்லை எம்மை நோக்கி இராணுவத்தினரே துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள் என்று வவுனியா – செட்டிகுளம் காட்டுப்பகுதி துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (1) துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒருவர் செட்டிகுளம் காட்டுபகுதியில் மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் “காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குழு மீது பதிலுக்கு இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்ததாக” சில இணையங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், “மூன்று பேராக கடந்த 31 பேராறு காட்டுப்பகுதிக்கு மரம் வெட்ட சென்று, நேற்று முன்தினம் (1) மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இராணுவத்தை கண்டு ஓடினோம். இதன்போது தங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர்” என தெரிவித்துள்ளனர்.

இன்று காலையே துப்பாக்கி சூட்டில் தம்மில் ஒருவர் காயமடைந்ததை அறிந்ததாகவும். தாம் சுடவில்லை என்றும், ஆயுதங்களும் வைத்திருக்கவில்லை எனவும், ஆனால் தாம் சுட்டதாகவே இராணுவத்தினர் கேஸ் கொடுத்துள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.