இராணுவ பாதுகாப்புடன் படையெடுக்கும் பௌத்த பிக்குகள்..! அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்திற்கு செங்கற்களும் கொண்டுவரப்படுகிறது..

0 16

முல்லைத்தீவு – குருந்துார் மலைக்கு பெத்த பிக்குகள் குழு நேற்றும் இன்றும் வந்திருக்கின்றது. இராணுவ பாதுகாப்புடன் அவர்கள் அழைத்து செல்லப்பட்டிருக்கின்றது.  

பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த மலையின் அடிவாரத்தில் பொலிசார் மற்றும் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்த வித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் 

ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருந்தூர் மலையினை பார்வையிடச்சென்ற தேரர்களை படம் எடுக்க வேண்டாம் என்று 

அங்கு கடமையில் நின்ற பொலிசாரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு குருந்தூர் மலையை பார்வையிடச் சென்ற 

பௌத்த துறவிகள் குழு குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளத்தினையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.