மன்னாரில் நடந்த சோகம் : இரண்டு குடும்பஸ்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி : பரிதவிக்கும் குடும்பத்தினர்

0 0

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இரண்டு ச.டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ச.டலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் வயது-45 மற்றும் வே.ட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் வயது-37 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட வி.ரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வே.ட்டையாடுவதற்காக அமைத்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உ.யிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று காலை குறித்த இருவரும் மின்சாரம் தா.க்.கி உ.யி.ரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பிரதேச வாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை து.ண்டித்தனர். அதன் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.