மாத்தறையில் 4 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை!

0 11

மாத்தறை – கந்தர, பங்களாவத்த பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவர் தனது 4 வயது மகனை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு தாய் அனுமதிக்காததால் குறித்த பெண் அவரது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்த பெண்ணின் கணவன் மீன்பிடி தொழில் ஈடுபடுபவராவார். அவர் சம்பவ தினத்தன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளதோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.