மட்டக்களப்பில் சோகம்- குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

0 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (வயது 62) என்பவரே சேறும், சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது மனைவி மற்றும் 9 வயது மற்றும் 13 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவருடனும், பிரப்பம் வளைவுப் பகுதியிலுள்ள வீதியைக் கடந்தபோது அங்கு தண்ணீர் நிரம்பியிருந்த வீதியிலுள்ள ஆழமான குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கியுள்ளார்.

வீதியால் தனது 9 வயதுப் பேரனை சுமந்து கொண்டு சென்ற கணவர் வீதியில் இருந்த குழிக்குள் விழுந்தவுடன், பின்னால் வந்த மனைவியும் விழுந்துள்ளார்.

இதனை அறிந்த மூன்றாவதாக வந்த 13 வயதான பேரன் தனது தம்பியின் தலைமுடி நீருக்கு வெளியே தெரியவர அவரைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு வந்து விட்டு பாட்டியின் தலைமுடியையும், பிடித்திழுத்து காப்பாற்றிவிட்டு பாட்டனாரைத் தேடிய பொழுது அவர் காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில் அயலில் நின்றவர்களின் உதவியுடன் தேடிய பொழுது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.