தூங்கும் போது தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

0 12

பழங்காலத்தில் தூக்கமின்மைக்கு பூண்டு ஒரு சிகிச்சைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதுவும் அந்த பூண்டை தூங்கும் போது பயன்படுத்தும் தலையணைக்கு கீழ் வைத்து தூங்கினார்கள்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அது தான் உண்மை.

பூண்டு எப்படி தூக்க பிரச்சனைக்கு உதவுகிறது?

பூண்டின் சக்தி வாய்ந்த வாசனை நாசி துவாரங்களில் உள்ள அடைப்பை நீக்கி, சுவாசத்தை சீராக்க உதவும். உங்களுக்கு சளி பிடித்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல், சரியாக சுவாசிக்க முடியாமல் திணறுவீர்கள்.
அப்போது ஒரு பல் பூண்டு எடுத்து, தலையணைக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் பூண்டில் உள்ள அல்லிசின், உடலைத் தாக்கிய நுண்ணுயிரிகளை தடுக்க உதவுகிறது.
ஒருவேளை உங்களுக்கு பூண்டு வாசனை வேலை செய்வது போன்று தோன்றினால், தூங்குவதற்கு முன் சிறிது பூண்டு சாப்பிடுங்கள்.
அதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால், கொதிக்கும் நீரில் 3-5 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, அந்நீரில் ஆவி பிடியுங்கள்.

பூண்டு மற்றும் தூக்கம்

பூண்டில் மக்னீசியம், பொட்டாசியம் என்னும் இரண்டு தாதுக்கள் உள்ளன. இவை தரமான தூக்கத்தைப் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மக்னீசியம் உடலில் ஆரோக்கியமான GABA என்னும் மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்களின் செயல்பாட்டைக் குறைக்கும் ஒரு நரம்பியக்கடத்தியின் அளவைப் பராமரிப்பதன் மூலம், நல்ல ஆழந்த அமைதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. இது உடலுக்கு ரிலாக்ஸை அளிப்பதோடு, மன அழுத்த அளவையும் குறைக்கிறது.

மறுபுறம், பொட்டாசியம் தூக்க செயல்திறனை அதிகரிக்கிறது. ஒருவருக்கு இந்த இரண்டு சத்துக்களும் அன்றாடம் போதுமான அளவில் உடலுக்கு கிடைக்குமானால், பூண்டு பற்களை படுக்கைக்கு கீழ் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது பூண்டு பற்களை தலையணைக்கு கீழ் வைப்பதால் பெறும் இதர நன்மைகளைக் காண்போம்.

பூண்டில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இதனால் அடிக்கடி கிருமிகளால் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.

குறிப்பாக சளி அல்லது காய்ச்சலின் போது பூண்டு பற்களை அதிகம் உணவில் சேர்ப்பதன் மூலம், விரைவில் விடுபடலாம்.

இதற்கு காரணம், பூண்டில் உள்ள அல்லிசின் நுண் கிருமிகள் உடலில் வாழ அனுமதிக்காமல் தடுப்பது தான்.

தலையணைக்கு கீழ் பூண்டு வைத்துக் கொண்டு தினமும் தூங்குவது, கிருமிகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும்.

ஆனால் உங்களுக்கு சளி பிடித்திருந்தால், உங்கள் உணவில் அதிகமாகவே பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு தூங்கும் போது, உங்களை சிறு சிறு பூச்சிகள், கொசுக்கள் தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறதா? அப்படியானால் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பூண்டு பூச்சிகளுக்கு நச்சுப் பொருள். இதை தலையணைக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்கும் போது, பூச்சிகள் உங்களை அண்டாது.

சிலர் பூண்டு பற்களைத் தட்டி நீரில் போட்டு, அந்நீரை பூச்சிகள் அதிகம் சுற்றும் பகுதிகளில் தெளிப்பார்கள்.

ஏனெனில் பூச்சிகளுக்கு பூண்டு வாசனை பிடிக்காது. கார்பன்-டை-ஆக்ஸைடு தான் ரொம்ப பிடிக்கும்.

அதிலும் ஒருவர் அதிகமான பூண்டு சாப்பிடும் போது, கார்பன்டைஆக்ஸைடுடன் பூண்டு சேர்ந்து ஒருவித மோசமான நாற்றத்தை அளிக்கும்.

நிச்சயம் இந்த வாசனை பூச்சிகளுக்கு எரிச்சலூட்டி அண்டவிடாமல் தடுக்கும்.

எச்சரிக்கை
நீங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வந்தால், அதுவும் பூனை மற்றும் நாய்களுக்கு பூண்டு நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் படுக்கையில் இல்லாத போது பூண்டு பற்களை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம். பூண்டு பற்களை செல்லப்பிராணிகள் சாப்பிட்டால் நோய்வாய்ப்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.