ஊஞ்சல் சேலையில் சிக்கி சிறுவன் மரணம்

0 14

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர், ஊஞ்சல் சேலையில் சிக்குண்டு உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (23) நடைபெற்றுள்ளது.

மகிழடித்தீவு, கட்டுப்பத்தை என்னும் பகுதியிலுள்ள மனோகரன் கேதீசன் (8-வயது) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாளான நேற்று மாலை வீட்டின் அருகிலுள்ள மாமரத்தில் தாயாரின் சேலையொன்றில் ஊஞ்சல் அமைத்து விளையாடுவதற்கு முற்பட்ட வேளையில் சேலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார், மாடுகளை மேய்க்க சென்று வீட்டுக்கு வந்து, சிறுவனை தேடியபோது, சீலையில் சிக்குண்ட நிலையில் இருந்தவரை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலையின் கடமை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.