நான் ஒருபோதும் விடமாட்டேன்! மைத்ரிபால சிறிசேன உறுதி

0 15

தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாந்துவவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை போவதாக எழுந்தள்ள சர்ச்சையை அடுத்து, அது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.