தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் பணிகள் வழமைக்கு திரும்பின!

0 13

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு வழமைப்போன்று செயல்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் கண்டறியப்பட்டதன் காரணமாக அந்த அமைச்சு மூடப்பட்டிருப்பதாக உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் கண்டறியப்பட்டதன் காரணமாக அந்த அமைச்சு மூடப்பட்டிருப்பதாக உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதில் எந்தவித உண்மையும் இல்லையென்று தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த இராஜாங்க அமைச்சின் ஊழியர்களில் சிலர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை இனங்காணப்பட்டதுடன், இந்த தொற்றுக்கு உள்ளானவர்கள் சுகாதார நடவடிக்கைகளில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இந்த தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை கொண்டிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் ஏனைய ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுகாதார பாதுகாப்பு மூலோபாயங்கள் ஆகக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதற்கமைவாக, அமைச்சின் கடமைகள், அலுவல்கள் வழமைபோன்று தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.