கொரோனாவுக்கான இரண்டாவது தடுப்பூசி செவ்ரோன் நகரில் போடப்பட்டது!- பிரான்ஸ்

0 12

கொரோனா வைரசுக்கான இரண்டாவது தடுப்பூசி செவ்ரோன் நகரில் இன்று போடப்பட்டுள்ளது.

பிரான்சில் முதன் முறையாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி போடப்பட்டது. செவ்ரோன் நகரில் வசிக்கும் 78 வயதுடைய Mauricette எனும் பெண்மணிக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாக இச்சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், முதல் தடுப்பூசி போடப்பட்டு 23 நாட்களின் பின்னர், அவருக்கான இரண்டாவது தடுப்பூசி இன்று ஜனவரி 19 ஆம் திகதி போடப்பட்டது. Pfizer-BioNTech எனும் தடுப்பூசியே Mauricette இற்கு போடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அதே ஊசியே போடப்பட்டுள்ளது.

அண்மையில், இவர் இறந்துவிட்டார் என போலியான செய்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.