காணமல் போன நபர் சடலமாக மீட்பு!| சோகத்தில் மூழ்கிய பிரித்தானிய குடும்பம்

0 14

வயது மதிக்கத்தக்க தாத்தா கடற்கரையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த Gareth Jones என்ற 69 வயது நபர் காணமல் போய்விட்டதாக அவருடைய மகள் Rhian Jones காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

கடைசியாக அவர் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் East Sussex-ன் Hove அருகே காணப்பட்டுள்ளார். அதன் பின் அவரைக் காணவில்லை.

இது குறித்து அவருடைய மகள் கூறுகையில், உண்மையிலே தந்தை ஒரு நல்ல மனிதர்.

கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு ஆர்.என்.எல்.ஐ லைப் படகுகளுடன் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவரை தேட உதவினர்.

ஏனெனில் அவர் Brighton-ல் இருக்கும் கடற்கரையில் தன்னுடைய நாயுடன் நடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடலோர காவல்படையினர் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், Brighton கடற்கரையில் அவர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் தங்கள் அப்பாவை தேட உதவிய அனைவருக்கும் உருக்கமுடன் நன்றி கூறியுள்ளனர்.

Gareth Jones கடந்த 2000 மற்றும் 2001-க்கு இடையில் மனிதவள மற்றும் சட்ட விவகாரங்களின் பிபிசி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் குறித்து, பிபிசி பத்திரிகை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், Gareth Jones ஒரு அற்புதமான சகா மற்றும் தலைவராக இருந்தார், அவருடைய இழப்பால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.