வவுனியாவில் இடம்பெற்ற கோர சம்பவம்!

0 16

வவுனியா செட்டிகுளம் நகர்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

இன்று காலை செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர், வீதியை கடக்க முற்பட்ட போது மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.