“ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்

0 14

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்பட விரும்பினால் மக்கள் மன்றத்திலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து செயல்படலாம் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு, அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகிய நான்கு பேர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.