ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்! ஒருவர் உயிரிழப்பு

0 14

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் எகிப்து நாட்டை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எகிப்து நாட்டை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கூறும்பொழுது, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் கிடால் பகுதியில் தெசாலித் அருகே சென்று கொண்டிருந்து ஐ.நா. சபை வாகனம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

எகிப்து நாட்டை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். மற்றொருவர் காயமடைந்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

இதேபோன்று எகிப்து அரசுக்கும் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.