பிரான்சின் தீவுகளிலும் தென்னாபிரிக்க வைரஸ்

0 11

பிரான்சின் கடல் கடந்த தீவு மாவட்டங்களிலும் தென்னாபிரிக்கக் கொரோனா வைரசின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக மய்யோத்தில் (Mayotte) தென்னாபிரிகக் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ள மய்யோத்தின் மாவட்ட ஆணையாளர் (Préfet), மய்யோத்திற்கான, கடல்வழி மற்றும் விமானவழிப் போக்குவரத்துக்கள் அனைத்தையும், எதிர்வரும் 15 நாட்களிற்குத் தடை செய்துள்ளார்.

பிரான்சின் எல்லைப்பகுதியிலிருந்தும், ரியூனியன் தீவுகளில் இருந்தும், மிகவும் அத்தியாவசியக் காரணங்களிற்காக மட்டுமே, மய்யோத் நோக்கிச் செல்ல முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.