இரண்டு நாட்கள் பாடசாலைக்கு சென்ற ஹட்டன் மாணவனுக்கு கொரோனா

0 10

ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என 53 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எல் மெதவெல்ல தெரிவித்தார்.

தரம் 10 இல் கல்வி பயிலும் ஹட்டன் நகரப் பகுதியை சேர்ந்த மாணவனுகே இன்று (15) வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் தொற்று உறுதியானது.

குறித்த மாணவனின் தந்தை கொழும்பிலிருந்து வந்த போது கினிகத்தேனை கலுகல சோதனைச் சாவடியில் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோனையில் தொற்று உறுதியானதையடுத்து அவரை தனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோனையிலே அவரது மகனான குறித்த மாணவனுக்கு தொற்று உறுதியானது.

தொற்றுக்குள்ளான மாணவன் கடந்த 07 ஆம் 08 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சென்றுள்ளதுடன் குறித்த பாடசாலையின் தரம் 10 எ பிரிவில் 45 மாணவர்களும் பி.பிரிவில் 08 மாணவர்ளுமாக 53 பேரும் ஆசிரியர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மெதவெல்ல மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.