Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

நல்லூர் புகழ் பிரசன்ன ஐயரின் குரலில் -டக் டிக் டோஸ் திரைப்பட பாடல்!

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெருமளவில் வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தினை தொடர்ந்து ராஜ் சிவராஜ் இயக்கத்தில்  டக் டிக் டோஸ் எனும் திரைப்படத்த்தினை அக்குழுவினர் தயாரிக்கின்றனர். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை  நல்லூரில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்னக்குருக்கள் பாடியுள்ளார். இதற்கான இசையினை பூவன் மதீசன்…

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள்!

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் திரண்ட மக்கள் கண்ணீர் மல்க உறவுகளை நினைவுகூர்ந்தார்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. பொலீசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வளாகத்திற்கான வளைவு…

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்டலீக்கிற்கு தடைவிதிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பினால் (FFSL ) தடைசெய்யப்பட்டுள்ளதாக இன்று(28) அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அதுவரை முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக 28.11.23 அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உதைபந்தாட்ட…

புதுக்குடியிருப்பில் வீட்டிற்குள் கஞ்சா!

புதுக்குடியிருப்பில்- வீட்டில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது!முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 24-11-23அன்று. பொலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டிற்குள் பொதிசெய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பொதி கஞ்சாவினை மீட்டுள்ளார்கள் 1.5கிலோ நிறைகொண்ட கஞ்சா பொதிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன்…

முள்ளிவாய்க்கால் மேற்கில் பாரிய கிடங்கினை தோண்டிய பொலீசார்!

இரண்டுநாட்களாக முள்ளிவாய்க்காலில் தோண்டிய பொலீஸ் இறுதியில் ஏமாற்றம்!முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்களை தேடி பொலீசார் மேற்கொண்ட இரண்டு நாட்களான தோடுதல் முயற்சியில் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதியினை மூடிவிடுமாறு நீதிபதி அறிவித்துள்ளார். போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து…

கொக்குத்தொடுவாயில் இதுவரை 30 மனித உடலங்கள் மீட்பு!

இன்று(24.11.23)  5 ஆவது நாளாக தொடர்ந்த அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் முற்றுமுழுதாக எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்கள்,குண்டுசிதறல்கள் ஒன்றும் மாக்கர் பேனா ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அகழ்வு பணியின் 5 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று 24.11.23 முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வு பணிஒருபுறம் நடைபெற்று இருக்க…

முல்லைத்தீவில் பொலீசாரின் நரித்தனம்-தடைகோரி நீதிமன்றத்தினை நாடிய பொலீஸ்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளினை தடைசெய்ய பொலீசார் நீதிமன்றத்தினை நாடல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி பொலீசார் நீதமன்றத்தினை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 13ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகிக்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் மாவீரர் நாளினை தடைசெய்ய…

இந்தியஇழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு – போராட்டம்!

24.11.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடைசெய்யகோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி மனு கையளித்துள்ளார்கள். வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளை உடனடியாக தடைசெய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…

அகிலத்திருநாயகிக்கு மாவட்ட செயலகத்தினால் கௌரவிப்பு!

நவம்பர் மாதம் முற்பகுதியில் பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  500 மீற்றர் நெடுந்தூர ஓட்டம், 5,000 மீற்றர் நெடுந்தூர விரைவு நடை ஆகிய…

யானை உயிரிழப்பு கஸ்ரப்பட்ட விவசாயி சிறையில் அடைப்பு!

யானை உயிரிழப்பு காணிஉரிமையாளர் சிறையில் அடைப்பு!முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது இந்த சம்பவம் கடந்த 22-11-23 இரவு இடம்பெற்றுள்ளதுசுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.யானையின் உயிரிழப்பு தொடர்பில் உள்ள தீவு மாவட்ட வன…