Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

யாழ்ப்பாணம்

தமிழக பக்த்தர்களின் புறக்கணிப்புடன் கச்சதீவில் திரண்ட மக்கள்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 23.02.2024 இன்று தொடங்கி 24.02.2024 திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நாளை சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும் இன்று கொடியேற்றத்திற்கு இதுவரை தமிழக பக்த்தர்கள் எவரும் வருகை தராத நிலையில் இலங்கையில் இருந்து சுமார் 3500 வரையான பக்த்தர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்….

கற்சிலைமடுவினை சேர்ந்த இளைஞனே யாழ் விபத்தில் உயிரிழப்பு!

23.02.2024 இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர்; கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுயாழில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் 29 அகவையுடை சிலையடி கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவினை சேர்ந்த அழகராசா நிதர்சன் என்ற இளைஞனே…

வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் உடையார்கட்டு வீராங்கனை!

2024ம் ஆண்டுக்கான வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட  உடையார்கட்டு வீராங்கனை K.தினோஷா 2ம் இடத்தினை பெற்றுள்ளார். நேற்றைய தினம் 17/2/2024 வவுனியாவில் வடமாகாண ஊர் கடந்து ஓடும் போட்டி நடைபெற்றது இதில் முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேச உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியுமான  K. தினோஸா 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.  முல்லைத்தீவு மாவட்டம்…

விபத்துக்கள்-வீதிகளில் நெல் காயவிடுவதும் காரணம் நடவடிக்கை எடுக்ககோரிக்கை!

வீதி விபத்துக்களை குறைக்கமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பிரதான வீதிகளில் நெல் உலர்த்துவது அல்லது காயப்போடுவது ஆகும். இதற்காக…

முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்து விளையாட்டில் சாதனை புரிந்து இலங்கைக்கு பெருமை சேர்த்த அகிலம் அக்கா என்று அழைக்கப்படும் அகிலத்திருநாயகி அவர்களை இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகி அவர்களை ஜனாதிபதி அவர்கள் நேரில் அழைத்து…

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், சமூக…

புதுக்குடியிருப்பில் கனடா மாப்பிளையின் திருமணத்தில் சர்ச்சை!

கனடாவில் வதிவிட உரிமை பெற்ற 24 அகவையுடைய இளைஞனின் திருமணத்தில் சர்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் பதிவு இல்லாத நிலையில் இரண்டு பெண்களுடன் குடும்பமாக வாழ்ந்து விட்டு ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தற்போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த யுவதியினை திருமணம் முடித்ததில் சர்சையான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது….

யாழ்ப்பாணம் வாள்வெட்டு குழு புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்துடன் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 04.12.2023 அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வைத்து பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்கள். தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த திங்கட்கிழமை(04) ஹயஸ் வாகனத்தில் வந்த இனம் தெரியாத குழு மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள்…

மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு!

பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்  நோக்கில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் பொருட்கள் திருகோணமலையில் அவரது மனைவி இல்லத்தில்…