Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

கிளிநொச்சி

கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் மாம்பழம்!

கிளிநொச்சிபளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகேட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில்  5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது வசந்தமண்டப பூசைகள்…

வன்னியின் பெரும்சமர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம் தனதாக்கியுள்ளது!

வன்னியின் பெரும்சமர் எனப்படும் கிளிநொச்சி மாகவித்தயாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டுநாள் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது. வன்னியின் பெரும்சமர் 13 ஆவது தடவையாக இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுள்ளன. இன்று இறுதிநாள் போட்டியில் 111 ஓட்டங்கள் பெற்று கிளிநொச்சி…

பிரமந்தனாற்றில் கத்திக்குத்திற்கு பலியான இளைஞனுக்கு நீதிகோரி திரண்ட மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாற்று  பகுதியில் இளைஞன் ஒருவனால் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் கைதான சந்தேக நபருக்கு பிணைவழங்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து 09.04.2027 அன்று  மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள். கடந்த 04.04.2024 அன்று கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியினை…

வன்னிப்பெருச்சமர்-2024 துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கும் இடையிலான வருடாவருடம் நடைபெறும் ”வன்னிப்பெருச்சமர்” துடுப்பாட்ட போட்டியானது இந்த வருடமும் சிறப்பான முறையில் இன்றைய தினம் (10) காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பு ஆரம்பமானது. இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம…

இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின்  கீழான 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கையினை  முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று(08-04-2024)  நீண்ட இழுபறிக்கு  பின்னர் பகல் 11 மணி…

புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் பூநகரியில் வெடிபொருட்களுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரிபகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 07.04.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் மற்றும் குரவில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் இருந்து ரி.என்.ரி வகை…

இரணைமடு குளத்தின் கீழான விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்க்கான இறுதித் தீர்மானங்களை எடுத்து பயிர்செய்கை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் எந்தவித தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படாது காலம் கடந்து செல்வதால் இரணை மடுக்குளத்தின் கீழான சுமார் 7500 கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் இரணை மடுக்குலத்தின் கீழ் சுமார் ஏழாயிரத்து…

சிவபுர வளாகத்தில் – மகா கும்பாபிஷேகம்!

கிளிநொச்சி முகமாலை சிவபுர வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் நவக்கிரக மூர்த்திகள் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று (05) சிறப்பாக இடம்பெற்றது  சுவிட்சர்லாந்து அருள்மிகு சூரிச் சிவன் கோவில்  சைவத் தமிழ்ச் சங்கத்தினால்  அன்பே சிவம் அறக்கட்டளை எனும் பெயரில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுக்கான பல்வேறு மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகிறது அந்தவகையில்  வடக்கு…

முல்லைத்தீவில் உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்- இராணுவ மரியாதையுடன் அடக்கம்!

முல்லைத்தீவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் (CSD)முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களில் பொரும்பாலானவர்கள் இராணுவ பயிற்சி பெற்று பணியாற்றிவருகின்றார்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு வடக்கில் வசிக்கும் கந்தசாமி ஜேக்கப் (மயூரன்) சிவில் பாதுகாப்பு முல்லைத்தீவு மாவட்ட தலைமையத்தின் கீழ் பணியாற்றியுள்ளார்…

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!

தற்போது வடக்கில் அதிகளவான வெப்பம் பதிவாகிவருகின்றது இதனால் ஊர்வன குறிப்பாக பாம்புகள் ஈரலிப்பான இடங்களை நாடிவரலாம் எங்கள் நீங்கள் வாழும் இடங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் வெப்பமான காலநிலை நிலவுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில…