Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

jaffna

புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் என்ற தொனிப்பொருளில் பாரிய கலாச்சார போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர் இன்று 03.03.2024 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள். இந்த ஊடக சந்திப்பில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் தவசீலன், சமூகசேவை உத்தியோகத்தர் சஞ்சீவன்,முன்னாள்…

புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் கரித்தாஸ் குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது 74 அகவையுடைய அதே பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உடலமாக காணப்பட்ட நிலையில் பிரதேச வாசிகள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் விசாரணைகளை…

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை முல்லைத்தீவு நகரில்!

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரில் இடம்பெறவுள்ள நிலையில் கால்நடை வளப்போரிடம் அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரிருந்து ஆரம்பமாகி ஆண்கள் மாங்குளம் வரை சென்று திரும்புவதோடு பெண்கள் கருவேலங்கன்டல் வரை சென்று திருப்பும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (3/3/2024) நடைபெறவுள்ளது…

அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சென்யூட்ஸ் விளையாட்டுக்களகம் நடத்தும் அமரர்ஜேம்ஸ் ஞாபகர்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி 03.03.2024 அன்று முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு.ஜஸ்வர் உமர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக்குழு…

சட்டவிரோத மின்சார வேலி- கால்நடைகள் இறக்கின்றன!

சட்டவிரோத மின்சார வேலி- கால்நடைகள் இறக்கின்றன –பண்ணையாளர்கள் ஆதங்கம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்விளான் பகுதியில் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் சிக்கி தமது கால்நடைகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் தமது வாழ்வாதாரமான கால்நடைகள் குறித்த சட்டவிரோத மின்சார வெளியில் சிக்கி நோய்வாய் படுவதாகவும்ஓரிரு நாட்களில் அவை இறந்து விடுவதாகவும் தெரிவித்த…

சாந்தனின் மறைவிற்கு முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி!

சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம்,விசுவமடு போன்ற பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. தாயக செயலணியின் ஏற்பட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளன. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பசுந்தளிர் பெற்றெடுத்த மண்ணுக்கென 33 வருடமாய் சிறையினிலே தம்மை…

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரவு 01.03.2024 இடம்பெற்ற விபத்தில் செம்மலையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பில் பகுதியில் மோட்டார் சைக்கில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிய விபத்தில் செம்மலை பகுதியினை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் மற்றும் காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து…

வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு!

வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்ற மூன்று வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அவர்கள் கடமையில் ஈடுபட்ட வேளை அந்த பகுதிக்கு வந்த பிரதேச வாசிகள் 10 பேர் குறித்த மூன்று உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொண்டு அச்சுறுத்தியுள்ளதாக…

திருட்டு வழக்கின் சாட்சிய இளைஞன் கொலை செய்யப்பட்டாரா ?

திருட்டு ஒன்றின் சாட்சியமாக நீதிமன்றில் ஆயராக இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காணாமல் போன குறித்த இளைஞன் கடந்த 23-01-2023 இடம்பெற்ற திருட்டு வழக்கொன்றின் முக்கிய சாட்சியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ……. முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை  கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் 22-01-2023…

விவசாய செய்கைக்கான அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் கடந்த காலபோகத்தில் ஏற்பட்ட தொடர்மழையினால் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைக்கு அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கமக்கார அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் 250 ஏக்கரில் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை கைவேலி,ஆற்றுப்பிலவு,குரங்கிருப்பான் போன்ற வயல் வெளிகளில் செய்கை பண்ணப்பட்டுள்ளது….