Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Eliphant

புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்றையதினம் (13.03.2024) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது….

முள்ளியவளை பொலீசாரின் வாகனம் தடம் புரண்டது!

முள்ளியவளை பொலீசாரின் வாகனம் தடம் புரண்டது! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் நிலையத்துக்குரிய பொலீஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு உள்ளது11-03-24 இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலீஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி…

பழைய கண்டிவீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி! முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி பற்றி உள்ளது. கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த…

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!

09.03.2024 அன்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகளுக்கு அருகாமையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிதைந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பில் மாஞ்சோலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தார்.  அதன்படி, முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மீட்கபடவுள்ளது

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!

தற்போது வடக்கில் அதிகளவான வெப்பம் பதிவாகிவருகின்றது இதனால் ஊர்வன குறிப்பாக பாம்புகள் ஈரலிப்பான இடங்களை நாடிவரலாம் எங்கள் நீங்கள் வாழும் இடங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் வெப்பமான காலநிலை நிலவுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில…

மேலதிக அரசாங்க அதிபராக -சி.ஜெயகாந்த் !

முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) திரு.சி. ஜெயகாந்த் கடமையினை இன்று பொறுப்பேற்ரார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ( காணி) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் தங்கம் -தோண்டும் நடவடிக்கை முடிவிற்குகொண்டுவரப்பட்டது!

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டு நாட்கள் தோண்டியும் ஏமாற்றம் ! முல்லைத்தீவு கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குமாரசாமி புரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானான சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும்,அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய…

வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்!

வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்! தருமபுரம் பொலிஸ் நிலையத்தால் 2024.02.16ம் திகதியன்று கிளிநொச்சி வழக்கு இலக்கம்: AR02/24 வீழ் தரமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ளஇடம் தனியாருக்குச் சொந்தமான கானியோன்றில் LTTE அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தர்மபுரம் பெலிசாரினால் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு…

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டாவது நாளாகவும்!

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று 19.02.2024 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில்…

நிரந்தர யானை வேலி அமைத்துத் தருக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை!

முல்லைத்தீவு பழம்பாசி மற்றும் மணவாளன்பட்ட முறிப்பு கிராமங்களுக்குள் நிரந்தரமாகவே யானைகள் வருவதை தடுப்பதற்கு யானை வேலி அமைத்துத் தருமாறு ஒட்டுசுட்டான் பிர தேச செயலாளரிடம் மேற் படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணவாளன்பட்டமுறிப்பு கிராமத்தில் சுமார் 400 வரையான குடும்பங்களும் பழம்பாசி கிராமத்தில் 390 வரையான குடும்பங்களும் வாழ்கின்றன. தற்போது காலபோக நெற்செய்கை முடிவடைந்ததையடுத்து கமநல…