விளையாட்டில் சாதனை படைத்த முத்தையன் கட்டு இளைஞர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தேசியரீதியாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டில் சாதனை படைத்து கிராமத்திற்கும் பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடிதந்த மூன்று விளையாட்டு வீரர்களை அவர்களின் கிராமமான ஜீவநகர் கிராம மக்கள் ஒன்றிணைந்து கௌரவித்துள்ளார்கள்.

அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் முல்லைத்தீவு முத்தையன் கட்டு இடதுகரை பாடசாலையில் இருந்து சென்ற மாணவனர்கள் சாதனை படைத்து பாராட்டு பெற்றுள்ளார்கள்.

இந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 28.07.2024 அன்று கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

ஜீவநகர் கிராமம் அடிப்படை பொருளாதார வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் அங்குள்ள மக்கள் நாளாந்தம் கூலிவேலை செய்து தங்கள் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்கள் இவ்வாறு மிகவும் கஸ்ரப்பட்ட பிரசேத்தில் வளர்ந்த மாணவர்கள் இன்று தேசியத்தில் சாதனை படைத்துள்ளார்கள்

இவ்வாறான மாணவர்களை இனம் கண்டு அவர்களின் விளையாட்டு திறமைகளை மேலும் வளர்த்துக்கொள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமைப்புக்கள் உதவி செய்யவேண்டும் என்பது எமது கருத்து முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பல மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை படைத்து வருகின்றார்கள் இவர்களை ஆக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி மேலும் வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்லவேண்டும்

ஒரு பட்டம் அல்லது தேசியத்தில் ஒரு சாதனடை படைத்துவிட்ட பலர் அதன் தொடர்ந்தும் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர அவர்களின் குடும்ப பொருளாதாரம் பாரிய பிரச்சினையாகவும் சவால்கள் நிறைந்தாகவும் காணப்படுகின்றது


அடிப்படையில் ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாத பாடசாலையில் கல்வி பற்று 3000 மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசியத்தில் 9 நிமிடம் 2 செக்கனில் ஓடிமுடித்து முதல் இடத்தினை பெற்ற ஜெயகாந்தன் விதுஷன், 9 நிதிடம் 32 செக்கனில் ஓடிமுடி;த மாரிமுத்து நிலவன் 5 ஆம் இடத்தினையும் 9 நிமிடம் 47 செக்கனில் ஓடிமுத்து 8 ஆம் இடத்தினை பெற்ற சபெற்ற சந்திரமோகன் இசைப்பிரியன் ஆகிய வீரர்கள் ஒரு வரலாற்று சாதனையினை படைத்துள்ளார்கள்.


ஒரு மாவட்டத்தில் இருந்து மூன்று மாணவர்கள் சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.சரியான பயிற்சி ஆசிரியர் இந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளார் அந்த ஆசிரிரும் இதன்போது பாராட்டப்பட்டுள்ளார்.
வீரர்களின் பாராட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாடசாலை அதிபர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

Admin Avatar