கடந்த 19.12.2024 அன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் இதுவரை எந்த தொடர்பும் அற்ற நிலையில் இலங்கை அரசினால் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
மியன்மார் நாட்டினை சேர்ந்த 115 அகதிகள் இலங்கைக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்த நிலையில் அவர்கள் முள்ளிவாய்காலில் இருந்து திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு படகினை ஓட்டிய சந்தேகத்தில் 12 பேர் விளக்கமறியலில் வைக்க்பபட்ட நிலையில் ஏனைய 103 அகதிகளும் 23.12.2024 அன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 12 படகோட்டிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார் அகதிகள் விடுவிக்கப்பட்டு 07.01.2024 அன்று அவர்கள் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள அகதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ள நிலையில் அகதிகளை நாடுகடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 09.01.2025 நாளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுமுன்னெடுகு;கப்படவுள்ளது.
இந்த நிலையில் கேப்பாபிலவில் தங்கவைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிளுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவிகள் வழங்கியுள்ளதுடன் மலேரியாதடுப்பு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்கியுள்ள கேப்பாபிலவு முகாமிற்கு மலேரியா தடுப்பு மருந்தும் விசிறும் நடவடிக்கை முன்ளெடுக்கப்பட்டுள்ளது.
மியன்மார் அகதிகளில் சிலர் நோயுற்ற நிலை மற்றும் கர்பவதி ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விமானப்படையினரால் அழைத்து செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள எந்த அமைப்க்களோ அல்லது அரசியல் கட்சிகளோ மக்கள் பிரதிநிதிகளோ,மனித உரிமை செயற்பாட்டாளர்களோ எவருமே இந்த மியன்மார் அகதிகளை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.