Saturday, January 11, 2025
HomeMULLAITIVUமுல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகின் ஆக்கிரமிப்பு !

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகின் ஆக்கிரமிப்பு !

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகள் தற்போது ஆக்கிரிமித்து எங்கள் வழங்களை சூறையாடி செல்வதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளதலைவர் ம.அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடலில் இந்திய இழுவைப்படகு அதிகரித்து காணப்படுகின்றது இதனால் எமது மீனவர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளார்கள் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் கடலில் இருந்து இந்தியமீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பில் காணொளி எடுத்து அனுப்புவதும் தொலைபேசி எடுத்து சொல்வதுமாக காணப்படுகின்றது.

பகலில் தூரத்தில் நிக்கும் இந்திய இழுவைப்படகுகள் இரவு நேரங்களில் கரையில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்குள் வருகின்றார்கள் இந்திய இழுவைப்படகு வருகை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அதேவேளை கடற்தொழில் அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட கடலில் இப்போதுதான் மீன்பிடி சீசன்,தற்போது இறால் சீசனும் தொடங்கியுள்ளது இந்தி இழுவைப்படகினால் எங்கள் வளமும் தொழிலும் பாதிக்கப்படுகின்றது.

இந்த தொழிலுக்காக எங்கள் மீனவர்கள்  வங்கிகளில் கடனினை எடுத்தும் நகைகளை அடைவுவைத்து செய்துள்ளார்கள் இந்திய இழுவைப்படகுகளால் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று அதிகாலை கடற்தொழில் அமைச்சரிடம் நான் முறையிட்டபோது அவர் இந்தியாவில் நிற்பதாக சொல்லியுள்ளார் தான் கதைப்பதாக சொல்லியுள்ளார் இந்திய இழுவைப்படகினை முற்றுமுழுதாக அரசாங்கம் தடைசெய்து தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments