முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு குளத்தின் கீழான கனகரத்தினபுரத்தில் சுமார் 400 ஏக்கர் வரையில் காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் இன்று அறுவடையினை தொடங்கியுள்ளார்கள்.
கால போக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் மழையினால் அழிவு,நோய்த்தாக்கத்தினால் அழிவு,யானையினால் அழிவினை சந்தித்து தான் இந்த அறுவடையினை தற்போது மேற்கொண்டுள்ளோம்
கனகரத்தினபுரத்தில் நோய்த்தாக்கம் பரவலடைந்து காணப்பட்டுள்ளதால் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது நெல்லுக்கான சரியான விலை இல்லாதத்தினால் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் வரையில் வெட்டுக்கூலி ஏற்படுகின்றது தனியார் துறையினரே நெல்லினை கொள்வனவு செய்கின்றார்கள் ஏக்கருக்கு 15 தொக்கம் 20 வரையான பை நெற்களையே அறுவடையாக கிடைக்கின்றது.
75 கிலோ பச்சை நெல்லினை 8000 ஆயிரம் ரூபாவிற்கு தனியார் கொள்வனவு செய்கின்றார்கள் அதிலும் பச்சையாக காணப்பட்டால் இன்னும் விலைகுறைவாகவே எடுக்கின்றார்கள் நாட்டில் அரிசிவிலை குறைந்ததாக இல்லைஆனால் நெல்லினை கொள்வனவு செய்பவர்கள் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்கின்றார்கள்
அறுவடை செய்த நெல்லினை காயவைத்து கொடுப்பது என்றாலும் ஒருநாள் ஒரு மனித கூலி மூவாயிரம் ரூபாவாக காணப்படுகின்றது(இரண்டுநேர உணவுடன்) இவ்வாறு காயவைத்து கொடுத்தால் ஏற்றுக்கூலியுடன் இன்னும் நட்டத்தினையே விவசாயிகள் பெறவேண்டிய நிலை.
இந்த நோய்த்தாக்கம் முத்தையன் கட்டுபிரதேசத்தில் மூன்று ஆண்டுகாளாக பரவி வருகின்றது இந்த நோயினை கட்டுப்படுத்த எந்த மருந்தும் இல்லாத நிலை இந்த நிலையில் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை நிர்ணயித்து விவசாயிகளின் நிலையினை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரியுள்ளார்கள்.