முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாற்று வலுவுடையோர்செயலணியின் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின நிழக்வுகள் 10.01.2024 இன்று புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் பிரதேச சமூகசேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது
நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஓர் அணியில் எழுச்சி கொள்வோம் என்ற தொணிப்பொருளிளில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் பான்வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிழக்வுகளுகம் சிறப்புற இடம்பெற்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைஅடங்கிய மனு ஒன்றும் இதன் போது முதன்மை விருந்தினர்,கௌரவ விருந்தினர்களிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆழுனர்,வடமாகாணசமூகசேவைதிணைக்கள பணிப்பாளர்,மாவட்ட செயலளாருக்கு,பிரதேச செயலாளருக்கும்,வலயக்கல்லி பணிப்பாளர்,சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கான மனுக்கள் இதன்போது வழங்கிவைக்க்பபட்டுள்ளது.
இந்த நிழக்வில் முதன்மை உரை நிகழ்த்திய மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்ரவன் அவர்கள்
மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3500ற்கு வரையானமாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள் மூவாயிரம் வரையான மாற்றுத்திறனாளிகளுக்க தற்போது 7500 ரூபா வரையான மாதந்த கொடுப்பனவு செய்யப்பட்டு வருகின்றது.
இங்கு இயற்கையான மாற்றுத்திறனாளிகளாக இல்லாமல் கடந்த போரினால் மாற்றுத்திறனாளிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சனத்தொகையினை ஒப்பிடுகையில் மாற்றுத்திறனாறிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பும் காணப்படுகின்றது.
இந்த ஆண்டு அரசாங்கத்தின் கொள்கைப்பிரடனத்தின் படி கிராமியவறுமையினை ஒழித்தல்,அரசாங்கத்தினை இலத்திரனியல்மயமாக்கல், மூன்றாவது கிளீன் ஸ்ரீல்ஙாக போன் மூன்று முக்கிய விடையமாக காணப்படுகின்றது.
கிராமிய வறுமை ஒழிப்பில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பும் உண்டு. கிளீன் சிறீலங்கா திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை மேம்படுத்தல் முக்கியமாக காணப்படுகின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.