முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு,மற்றும் பிலக்குடியிருப்பு பகுதிகளில் காட்டுயானையின் தொல்லை அதிகாரித்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்
இன்னும் சில காலத்தில் நெல் அறுவடை நிறைவடையவுள்ள நிலையில் நேற்று(08) இரவு கேப்பாபிலவு பகுதிக்குள் நுளைந்த காட்டுயானைகள் அருகில் உள்ள வயல் வெளிகளை நாசம் செய்துவிட்டு கேப்பாபிலவு விமானப்படையிரின் வேலியினை உடைத்துக்கொண்டு விமானப்படைத்தளத்திற்குள் சென்றுள்ளது.
விமானப்படையிரினின் கம்பியிலான நெற்வேலியின் தூண்கள் 5 உடைக்கப்பட்டு வேலியினை சரித்துக்கொண்டு உள்நுளைந்துள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மை நாட்களாக இந்த காட்டுயானைகள் குறித்த பகுதியில் உள்ள விவசாயிகளின் வயல் நிலங்களை நாசம் செய்துவருவதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.