புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கத்திற்கு எதிராக கிராம சேவையாளர்கள் சிலர் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.
குறித்த முகநூல் பக்கத்தில் புதுக்குடியிருப்பு பிரதேத்திற்கு உட்பட்ட கிராமசேவையாளர்கள் தொடர்பில் கருத்து பகிர்ந்து கொண்டுள்ளமையினை கண்டித்துள்ள கிராமசேவையாளர்கள் அவை உண்மைக்கு புறம்பான தகவல் என தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பிரதேசசெயலாளர் மற்றும் கிராம அலுவலகர்கள் மக்களுக்கான சேவைகள் வழங்குவதில் எவ்வாறன கரிசனை கொண்டுள்ளார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சில கிராமசேவையாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் செய்யும் செயல்கள் சில அதில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அதிகாரியிடம் முறையிட சென்றுள்ளார்கள் அங்கு முறைப்பாடு பிரதேசத்தில் உள்ள பொலீஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்படவேண்டும் என தெரியவந்துள்ளதை தொடர்ந்து
இன்று 09.01.2025 புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு சென்ற கிராம சேவையாளர்கள் ஊழல் ஒழிப்பு அணிவன்னி என்ற முகநூல் பக்கத்தினை காட்டி அதில் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் தொடர்பான தகவல் பகிரப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.
இலங்கையில் அரச உத்தியோகத்தர்கள் பலர் தங்கள் கடமையினை செய்யத்தவறி அவர்களின் சொந்தவேலைகளையே பார்த்துவருகின்றமை முகநூல் தளங்களின் பேசு பொருளாகா காணப்பட்டுள்ளது.