Monday, January 6, 2025
HomeKElinochchiஉயிரைப் பறித்த முழுப் பொறுப்பு தாரரும்(RDA) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையே சாரும்!

உயிரைப் பறித்த முழுப் பொறுப்பு தாரரும்(RDA) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையே சாரும்!

புனரமைப்பை முன்னெடுத்த ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞைகள் அவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஒப்பந்தகாரர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்திருந்தால் அதற்கான முழுப்பெறுப்பும் RDA உரியது தானே? ஆக அந்த இடத்தில் எச்சரிக்கை சமிஞை பதாகை இடுவதும் தடுப்பு அமைக்க வேண்டியதும் RDA உங்கள் பொறுப்புத் தானே?

பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிட்டு அடுத்தவர்மேல் சிறு பிள்ளைத் தனமாக சாட்டுக்களை போட்டு விட்டு தப்பிக்க வேண்டாம்.போனது இரு உயிர்கள் இதற்கு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையே!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பாலம் புனரமைக்புக்காக இந்த நிலையிலேயே உள்ளது. அவதானிப்புக்காக ஒரே ஒரு மஞ்சள் நிற எச்சரிக்கை ரிபன் மாத்திரமே கட்டப்பட்டிருந்துள்ளது. அதுவும் இருவு வேளைகளில் ஒளிரும் திறனற்றது.

ஊடக அறிக்கை இல: 25/01/07

ஏ- 35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார்.

அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால், பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அந்த வீதியூடாக இன்று வெள்ளிக்கிழமை (03.01.2025) பயணித்த ஆளுநர், இடைநடுவில் புனரமைப்பு நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டதுடன் அந்தப் பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களும், பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

@ மார்ச் மாதம் அளவில் புனரமைப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்றும், அதுவரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் எனவும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments