Wednesday, January 8, 2025
HomeMULLAITIVUமுல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட மியன்மார் அகதிகள் எதுவித தொடர்பும் இல்லை!

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட மியன்மார் அகதிகள் எதுவித தொடர்பும் இல்லை!

கடந்த 19.12.2024 அன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் இதுவரை எந்த தொடர்பும் அற்ற நிலையில் இலங்கை அரசினால் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

மியன்மார் நாட்டினை சேர்ந்த 115 அகதிகள் இலங்கைக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்த நிலையில் அவர்கள் முள்ளிவாய்காலில் இருந்து திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு படகினை ஓட்டிய சந்தேகத்தில் 12 பேர் விளக்கமறியலில் வைக்க்பபட்ட நிலையில் ஏனைய 103 அகதிகளும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக நேரில் சென்று பார்வையிடுவதற்காக இலங்கையின் மனிதஉரிமைஅமைப்புக்கள் மனித உரிமை ஆர்வலர்கள் முயற்சித்த போதும் அது பலனளிக்காத நிலையில் இன்றும் தொடர்கின்றது.

மியன்மார் அகதிகளை விசாரணை செய்வதற்காக இலங்கையின் மனிதஉரிமைஆணைக்குழுவின் பணிப்பாளர்களின் ஒருவரான சந்திரசிறி அங்கு சென்றிருந்தார். அவருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை
இலங்கை மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றின் உத்தரவின் பெயரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எவரையும் விசாரணை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த அதிகாரத்தின் பிரகாரம் எவர் எங்கு தடுத்துவைத்திருந்தாலும் அங்கு சென்று விசாரணை செய்யமுடியும்.

அதனை மேற்கொள்ளவே குறித்த அதிகாரி அங்கு சென்றிருந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை
23.12.2024 அன்று குறித்த அகதிகளுக்கு இலங்கை செஞ்சிலுவைசங்கம் சென்று உதவிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உடைகள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டன. போர்வைகள், சானிடைசர்கள்  துண்டுகள் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments