கால்நடைகளை கடத்தி செல்ல முற்பட்ட பார ஊர்தி பொதுமக்களால் மடக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று 07.01.2025 இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதிகளிலிருந்து அதிக கால்நடைகள் அண்மைய காலங்களில் காணாமல் போவதுண்டு
,இந்த நிலையில் இன்று மல்லாவி கல்விளான் பகுதியிலிருந்து பார ஊர்தி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட கால்நடைகள் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தியதோடு மல்லாவி போலீசாருக்கும் தகவல்கள வழங்கினர்
குறித்த பகுதிக்கு வருகை தந்த மல்லாவி போலீசார் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் அவர்களிடம் இல்லாததினால் பாரவூர்த்தியை போலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் போலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிந்த போலீசார் நாளைய தினம் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தனர்