முள்ளியவளையில் சிறப்புற செயற்பட்டுவரும் வித்தியா தீபம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளளியவள மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியா தீபம் என்ற புலம்பெயர் தமிழர்காளல் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தற்சார்ப்பு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட வித்தியா தீபம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்ட மாணவர்களுக்கான ஆறுமாத கால தையல் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வளங்கும் நிகழ்வும் தையல் கண்காட்சியும் இன்று 27.04.2024 சிறப்புற நடைபெற்றுள்ளது.

ஏற்பாட்டாளர் லிகிர்த்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிவசுவாமி சர்மினி சிறப்பு விருந்தினராக வித்தியாதீபம் சுவீஸ் இன் ஆலோசகர் ம.ஸ்ரீPகரன்  உள்ளிட் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இந்த நிகழ்வில் மூன்றாம் கட்ட தையல் பயிற்சியினை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன்  தொடர்ந்து மாணவர்களுக்கான கணிணி பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டு பயிற்சி வழங்கிவைக்கிவைக்கப்பட்டுள்ளது.

தண்ணிமுறிப்பு பாடசலை மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் பாடசாலைக்கான மடிக்கணணி என்பனவும் மற்றும் தண்ணீரூற்று இந்துதமிழ்கலைவன் பாடசாலைக்கான மடிக்கணணி மற்றும் புத்தகங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளது

மறைந்த ஓவியர்  யாக்கோப்பு மிக்கோட்பிள்ளை அவர்ளின் நினைவாக மாணவர்களிடையே ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் 70 அகவைக்க மேற்பட்ட 15 முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Admin Avatar