முல்லைத்தீவில் கொமர்சல் வங்கியால் யோக்கட் இயந்திரம் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் குமுழமுனை பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக இயங்கிவரும் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு யோக்கட் பதனிடும் இயந்திரம் கொமர்சல் வங்கி முள்ளியவளை கிளையினால் யோக்கட் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை கிளையின் முகாமையாளர் திரு.செல்வரத்தினம் தினேசன் தலைமையில் 22.08.2024 அன்று றடைபெற்ற நிகழ்வில்.

பிரதம விருந்திரனராக கொமசல் வங்கியின் தனிநபர் வங்கிப்பிரிவு மற்றும் S.M.E உதவி பொதுமுகாமையாளர் சிவசுப்பிரமணியம் கணேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொமசல் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் அருளம்பலம் ஜெயபாலன் அவர்களும்,முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவ அபிவிருத்தி உதவி ஆணையாளர் புஸ்பராணி புவனேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

இவர்களுடன் கொமர்சல் வங்கி அபிவிருத்தி கடன் பிரிவின் முகாமையாளர் பிரியங்கர,முல்லைத்தீவு கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் ஞானேஸ்வரன் பொது முகாமையாளர் சுமித்தா கலியுகன்,கொமர்சல் வங்கியின் முள்ளியவளை கிளையின் ஊழியர்கள் பண்ணையாளர்கள் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

கடந்த 11 ஆண்டுகளாக கொமர்சல் வங்கியுடன் இணைந்து தமது பணியாளர்கள்,பண்ணையாளர்களுக்கான பல்வேறு  சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கடன்திட்டங்கள் மற்றும் இலங்கை மத்தியவங்கியின் விவசாயிகளுக்கான விசேடமாக வழங்கப்படுகின்ற விவசாய கடன் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் கூட்டுறவு அமைப்பினர்.

குறித்த அமைப்பின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக யோக்கட் பதனிடும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல இட்சம் பெறுமதியான குளிரூட்டி பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இரு நிறுவனங்களுக்கும் ஊழியர்கள் பயனாளர்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிக்கும் நோக்கிலும் வருடா வருடம் தைப்பொங்கல் பெருவிழாவும் கொமர்சல் வங்கியின் முழுமையான நிதி அனுசரணையுடன் குமுழமுனை கால்நடை வளர்பப்போர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கொமர்சல் வங்கியின் நிலைபெறுதகு நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக பயன்பது தேக்குமரக்கன்றுகளும் அதிகாரிகளால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

Admin Avatar