செட்டிகுளம் சித்தி விநாயகர் பயிற்சி வகுப்பு தொடங்கிவைப்பு!

வவுனியா செட்டிகுளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இளைஞர்கள் மத்தியில் மது போதைகள், கிராமமட்ட வன் செயல்கள் அதிகரித்து காணப்படுவதனால் சிறுவர் மட்டத்திலிருந்து ஆன்மீக வழிபாடுகளையும் நல்லொழுக்கங்களையும் பேணிக் காக்கும் முகமாக 28.07.2024 அன்று அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சைவ மணி சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செட்டிகுளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஆலக பிரதம குரு கோடீஸ்வர சிவாச்சாரியர் ஆசி உரை வழங்கிவைக்க தொடர்ந்து சிறப்புரையினை கலாநிதி தமிழ்மணி அகிளங்கன் ஆசிரியர் நிகழ்த்தினார் தொடர்ந்து கருத்துரைகளை போசிரியர் கலாநிதி விஜிதரன் பீற்றர் பல்கலைக்கழக உரிமையாளர்,மக்கள் சேவை மாமணி காந்தன்,அகில இலங்கை சிவசங்க தலைவர் இராச மாதங்கி சுவாமிகள்,செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர் தயாகரன்,ஆசிரியர் சயிந்தன்,அகில இலங்கை சற்சங்க தலைவர் சண்முகநாதன் ஆகியார் நிகழ்த்த நிகழ்ச்சியினை கலாநிதி சிறீஸ்கந்தராசா தொகுத்து வழங்கினார்.

அகில இலங்கை சற் சங்க சபையின் அனுசரணையுடன் சிறுவர் மட்டத்தில் ஆன்மீக வழிபாடுகளை பின்பற்றும் முகமாகவும் பெரியோர்களை மதித்தல் தொடர்பாகவும் வழிபாட்டு முறைகள் தொடர்பாகவும் அதனை பின்பற்றும் நோக்கோடு மாணவர் மட்டத்தில் கருத்தரங்கும் உருத்திராக்க மாலையும் அணிவித்து அன்னதான நிகழ்விலும் ஈடுபடுத்தியுள்ளர். இதில் மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், மதகுருமார்கள், கல்விமான்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Admin Avatar