Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

வவுனியா

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று  தமிழ்தேசிய மக்கள்…

வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் உடையார்கட்டு வீராங்கனை!

2024ம் ஆண்டுக்கான வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட  உடையார்கட்டு வீராங்கனை K.தினோஷா 2ம் இடத்தினை பெற்றுள்ளார். நேற்றைய தினம் 17/2/2024 வவுனியாவில் வடமாகாண ஊர் கடந்து ஓடும் போட்டி நடைபெற்றது இதில் முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேச உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியுமான  K. தினோஸா 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.  முல்லைத்தீவு மாவட்டம்…

மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன  கிளித்தட்டு வரலாற்றில் முதல் முறையாக வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024” கிளித்தட்டு சுற்றுப் போட்டிகள்  மாசி மாதம் 23,24,25 ம் திகதிகளில் நெடுங்கேணி 17ம் கட்டை துர்க்கா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது  முல்லைத்தீவு மாவட்டத்திற்கு…

விபத்துக்கள்-வீதிகளில் நெல் காயவிடுவதும் காரணம் நடவடிக்கை எடுக்ககோரிக்கை!

வீதி விபத்துக்களை குறைக்கமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பிரதான வீதிகளில் நெல் உலர்த்துவது அல்லது காயப்போடுவது ஆகும். இதற்காக…

வவுனியாவில் இருவர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05) நடைபெற்றது. இதன்போது காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் ஜனாதிபதியை காண்பதற்காக நகரசபை வீதியூடாக உள்நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை…

மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு!

பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்  நோக்கில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் பொருட்கள் திருகோணமலையில் அவரது மனைவி இல்லத்தில்…

வவுனியா ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிடம் அமைத்துக்கொடுப்பு!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிட வசதி இல்லாத நிலையில் இயங்கிவந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் நிலம் மக்கள்  அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்தோரின் நிதிப்பங்களிப்புடன் முன்பள்ளிக்கான  கட்டிடம் அமைத்து முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த 22 மாணவர்கள் கல்விகற்று வரும் இந்த முன்பள்ளிக்கான கட்டிடங்கள்…

வெளிநாட்டு மோகம் பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள்-பொலீசாரின் அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பேஸ்புக், வாட்ஸ்அப் இல் வரும் தகவல்கள் தொடர்பில்,அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை..! வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு…

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே விழிப்பாக இருங்கள்!

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் கைவரிசை! சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் அந்த வைகையில் கடந்த 02ம திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC  சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது பேரூந்து புத்தளம் பகுதியை…

வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை!

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து  வவுனியா மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. இவர்களது திடீர் அக்கறை காலம் காலமாக…