முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு விரும்பம் கொள்ளாத அதிபர்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு விரும்பம் கொள்ளாத அதிபர்!

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க.பாடசாலையில் கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத நிலையில் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்று 19.06.2024 7.20 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைக்குள் ஆசிரியர்கள் நுளையமுடியாது பணிக்கு செல்லவில்லை இந்த சம்பவத்தினை தொடர்ந்து 8.00 மணியளவில் குறித்த பாடசாலைக்கு முல்லைத்தீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வந்து பாடசாலையினை இயங்கவிடுமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்கள்

ஆசிரியர்களை பணிக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.
அதன் பின்னர் பாடசாலைக்குள் ஆசிரியர்கள் சென்றுள்ளார்கள்.

இந்த நிலையில் முல்லை வலயக்கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன் பாடசாலைக்கு வருகைதந்துள்ளார்.

அதிபர் தேவை என போராட்டம் நடத்தியவர்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பாக 5பேரை பாடசாலைக்குள் அழைத்து பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் வெளியில் வந்தவர்கள் அவரின் நிலைப்பாட்டினை ஏனைய பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளார்கள்

பாடசாலைக்கு நிதந்தர அதிபர் பற்றி முடிவெடுக்கவில்லை முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பமின்மை என்றும் அதற்கான முயற்சிகள் எடுப்பதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் இதுவரை பாடசாலைக்கான நிதந்தர அதிபர் கிடைக்கும் என்று உறுதிமொழிகூட வரவில்லை அவர்கள் முயற்சி செய்வதாக சொல்லியுள்ளார்கள் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் படி சொன்னார்கள் அதிபருக்கான வேண்டுகை செய்து அதற்கு சுமூகமான முடிவு வந்தால் நடக்கும் என்று சொல்லியுள்ளார்கள் எங்களுக்கு இப்பொழுதும் நிதந்தர அதிபர் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை வலயத்தின் முடிவின் படியும் பொலீசாரின் அறிவித்தலின் படியும் பிள்ளைகளை அனுப்ப முடிவெடுத்துள்ளோம் என்று கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு குருத்து தெரிவித்த பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Admin Avatar